டெல்லி கனமழை – யமுனை நதியை ஒட்டிய பகுதிகளிலுள்ள பள்ளிகள் ஜூலை 18 வரை விடுமுறை!!
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதியை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூடப்படும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.