வரிகளை உயர்த்த புதுவை அரசு திட்டம்!!
புதுவை அரசு சுயசார்பு டன் இருக்க கொள்கை நடவடிக்கைகளை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய நிதித்துறை துணைச் செயலர் ரத்னகோஷ் கிஷோர் சவுரே சமீபத்தில் அனுப்பிய குறிப்பில் வருவாய் வளங்களை புதுவை அரசு பெருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் நலத் திட்டங்களுக்கு சொந்த வளங்களில் இருந்து நிதியை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு நிதி உதவியை கூடுதலாக ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சொத்து வரி, ஜி.எல்.ஆர். மதிப்பு மற்றும் பிற கட்ட ணங்களை அதிகரிக்க புதுவை அரசின் பரிசீலனைக்கான முன்மொழிவுகளைத் தொடங்க வருவாய் ஈட்டும் துறைகளுக்கு கவர்னர் தமிழிசை அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்: நீராவி என்ஜின் வடிவில் சுற்றுலா ரெயில் அத்துடன் பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய், வணிகவரி ஆகிய துறை களில் வருவாயை பெருக்கும் திட்டங்களை தொடங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. புதுவை அரசின் வரி வருவாயில் கலால் வரி வசூல் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது.
2022-23-ம் ஆண்டில், கலால் துறை ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட சுமார் ரூ.300 கோடி அதிக மாகும். இந்த நிதி ஆண்டின் கடந்த 3 மாதங்களில் கலால் வரி வசூல் சுமார் ரூ.476 கோடியை தொட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட அதிகமாக வசூலாகியுள்ளது. கலால்துறையில் அதிக வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது. இதனால் கலால் வரியை இன்னும் கூடுதலாக உயர்த்தலாமா? என்ற ஆலோசனையும் அரசிடம் உள்ளது. அதேநேரத்தில் வெளி மாநிலங்களின் மது விற்பனை விலையை புதுவை விலை நெருங்கி விட்டதாக கருதப்படுகிறது. இதனால் கலால் வரி உயர்வினால் புதுவைக்கு வரும் மது பிரியர்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு உள்ளது. அதுபோல் நேரடியாக மக்களை பாதிக்கும் வகையில் வரியை உயர்த்தவும் அரசிடம் தயக்கம் உள்ளது. இருப்பி னும் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.