16 மணித்தியாலங்கள் வரை பணி நேரம் – தொழிலாளர் சட்டத்தில் வரவுள்ள மாற்றம் !!
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை திருத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை முற்றாக ஒழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்ணனி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்தின் உத்தேச தொழிலாளர் சட்ட திருத்ததில் 8 மணித்தியால பணி நேரத்தை 12 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் தொழிலாளரின் அனுமதியுடன் பணி நேரத்தை 16 மணித்தியாலங்கள் வரை அதிகரிக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் அரசாங்கம் இந்த முயற்சியை முன்னெடுத்தள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் எனவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.