பொருளாதார திவால்நிலை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் இன்று!!
நாட்டின் பொருளாதார திவால்நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு இன்று (18) முதன்முறையாக கூடவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூட்டம் நடைபெற உள்ளதாக குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தீர்மானங்களை எடுத்த தரப்பினர் மற்றும் பொருளாதாரத்தை ஆராயக்கூடிய அறிஞர்கள் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அந்தக் குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதற்கு அண்மையில் தீர்மானித்திருந்தனர்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட குழுவின் தலைவராக சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.