வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் 13 உடல்கள் கண்டெடுப்பு – தென்கொரியாவில் சம்பவம் !!
மத்திய தென் கொரிய நகரமான சியோன்ஜூவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினரால் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை (15) இரவு, அணை உடைந்ததையடுத்து, சுரங்கப்பாதை ஆற்றுநீரால் நிரம்பியது.
இதன்போது, கார்களில் இருந்தவர்களும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளும் சுரங்கபாதையினுள் சிக்கியுள்ளனர்.
685 மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
ஆனால், அதில் 15 கார்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக நாட்டில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழையால் தென்கொரியாவில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (17) நிலவரப்படி, வார இறுதியில் பெய்த மழைக்குப் பிறகு குறைந்தது ஒன்பது பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் புதன்கிழமை வரை கனமழை பெய்யும் என்று கொரியா வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வானிலை கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த பதினைந்து நாட்களில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.