இலங்கைக்கு உதவ உலக வங்கி தயார் !!
இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாகவும் எதிர்வரும் மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் எனவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பட்டுள்ளார்..
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு இன்றியமையாத தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்கான கடனில் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.