;
Athirady Tamil News

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் – தென் ஆப்பிரிக்கா அதிபர் அறிவிப்பு!!

0

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாட்டை நடத்துவதற்குத் தென் ஆப்பிரிக்கா தயாராக உள்ளது என அதிபர் சிரில் ராமபோசா உறுதிப்படுத்தினார். இதன்படி அடுத்த மாதம் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின் முதல் முறையாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கக் கூடிய முதல் உச்சி மாநாடாக அது அமையும். உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் படையெடுப்பு தீவிரமடைந்து உள்ள சூழலில், போரைக் கைவிட உலக நாடுகள் வலியுறுத்தின.

சர்வதேச அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதனை இரு நாடுகளும் கேட்கவில்லை. போர் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த புதினை கைது செய்யச் சர்வதேச குற்ற நீதிமன்றம் சார்பில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதில், தென் ஆப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக உள்ளது. அதனால், புதின் அந்நாட்டில் இருக்கும்போது, அவரை கைது செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். ரஷிய கூட்டமைப்பு சார்பில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் என ரஷிய அதிபரின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.