’கண்ணை இமைபோல் காப்போம்’ !! (மருத்துவம்)
மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில செயல்களே, நமது கண்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.
அப்படி, நம் கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்தான் கண்களை அடிக்கடி தேய்ப்பதாகும். கண்களில் அரிப்பு ஏற்படும்போது கண்களை அழுத்தித் தேய்ப்பது, தற்காலிக நிவாரணத்தை வழங்கலாம். ஆனால், அது உங்கள் கண்ணின் பல பாகங்கள் மீது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கடுமையான கண் நோய் ஏற்படும்
கண்ணைத் தொடர்ந்து தேய்த்தால், கார்னியா பலவீனமடைவதற்கும் கெரடோகோனஸ் எனப்படும் கார்னியாவைச் சிதைப்பதற்கும் வழிவகுக்கும். கார்னியல் திசுக்களைத் தொடர்ந்து தேய்த்தால், அது மெல்லியதாகி மேலும் கூம்பு வடிவமாக மாறும். இந்தப் பாதிப்பு மோசமானால், உங்களுக்கு ஒரு கார்னியல் மாற்று தேவைப்படலாம். கார்னியாவை கீற வாய்ப்புள்ளது
கண் இமைகளில் இருக்கும் தூசுகள், உங்கள் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம், இதனால், உங்களுக்கு கண்ணை தேய்க்கத் தூண்டும். ஆனால், அது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கலாம். இது, உங்கள் கார்னியாவை நீங்களே சேதப்படுத்துவதாகிவிடும். இது, சில நாட்களில் குணமாகிவிடும். ஆனால், சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், புண் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
கண் அழுத்த நோய்
இந்த மோசமான நிலை, ஏற்கெனவே உங்களுக்கு இருந்தால், கண்களைத் தேய்ப்பதானது, மேலும் மோசமாக்கும். உங்கள் கண்கள் முன்னால் திரவம் கட்டிக்கொள்வதால், கண் அழுத்த நோய் ஏற்படுகிறது. இது, பார்வை நரம்பைச் சேதப்படுத்துவதோடு, இறுதியில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
கண்களைத் தேய்த்தல், மீண்டும் இரத்த ஓட்டத்தைச் சீர்குலைத்து, நரம்புப் பாதித்து, பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும்.
உங்களின் கிட்டப்பார்வையை மோசமாக்கும்
மயோபியா என்பது கிட்டப்பார்வை உள்ளதாகும், கண்களைத் தேய்ப்பது, இந்த நிலையை மேலும் மோசமாக்கும். கிட்டதட்ட 18 மில்லியன் மக்கள், இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கண்களைத் தொடர்ந்து தேய்க்கும் போது, இந்த நிலை மிகவும் மோசமாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தொற்றுநோய் உண்டாகலாம்
உங்கள் கைகளை எவ்வளவு கழுவினாலும் அல்லது சுத்தப்படுத்தினாலும், தினந்தோறும் உங்கள் கைகள் கோடிக்கணக்கான கிருமிகளால் தாக்கப்படலாம். உங்கள் கண்களைக் கைகளால் தொடுவது, பற்றீரியாக்களைக் கண்களுக்குப் பரப்பும். இது, கான்ஜுண்ட்டிவிடிஸ் அல்லது கண்களில் இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும்.
கண் இமைகளில் தளர்வு
கண்களைத் தேய்ப்பது உங்கள் புருவங்களை விட கண் விழியை அதிகமாகக் காயப்படுத்தும். இதனால், கண் இமை காலப்போக்கில் நெகிழ்ச்சியை இழக்கக்கூடும். கண்களின் இமைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தாத அளவுக்கு, கண்களைத் தேய்க்கவும்.