;
Athirady Tamil News

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது தவறு – வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் !!

0

ஐரோப்பிய ஓன்றிய கூட்டமைப்பில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு பிரித்தானியா விலகியது.

முக்கியமான கொள்கை முடிவுகள் பற்றி பொதுவாக மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் பொது வாக்கெடுப்பு, பொது கருத்துக்கேட்புகள் நடத்தப்படுவது இயல்பு.

இதில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியது பற்றி அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக்கேட்பு முடிவுகள் நேற்று(18) வெளியிடப்பட்டது.

அதற்கிணங்க, 57 சதவீதம் பேர், ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது தவறானது என்று தெரிவித்துள்ளனர்.

55 சதவீதம் பேர் பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள்(31 சதவீதம்) ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேராமல் தனியாகவே இருக்க வலியுறுத்தியுள்ளனர்..

அத்துடன், இக்கூட்டமைப்பில் பிரித்தனியா இருப்பதனால் சதகாமான விளைவுகள் ஏற்படுமா என பல ஆண்டுகளுக்கு முன்னராகவே விவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளன.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திருந்து பிரித்தானியா விலகியதனை தொடர்ந்தும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி தொடர்பாகவும் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கொரோனாவுக்கு பின்னரான காலங்களில், ஏனைய ஐரோப்பிய நாடுகளை போல அல்லாமல், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தனியாகவே சமாளித்து வந்துள்ளது.

அதன் சாதக, பாதகங்கள் பற்றி இங்கிலாந்து, வேல்ஸ், ஐரிஸ் மக்களைக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தினர் தொடர்ச்சியாக உரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2021 ஜனவரியில் இதேபோல ஒரு கருத்துக்கேட்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில், 49 சதவீதம் பேர் இணைவுக்கு ஆதரவாகவும் 37 சதவீதம் பேர் இணைவுக்கு எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

பழைமைவாதக் கட்சியின் பிரதமர் ரிஷி சுனக் கடந்த மே மாதம் இதுகுறித்துப் தெரிவிக்கையில்,

பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை, பிரிட்டனுக்கு பலவித பலன்களை அளித்துள்ளது.

குறிப்பாக, சந்தை வர்த்தக வலையங்கள், வாட் வரி குறைப்பு ஆகியவற்றால், பீர், ஆரோக்கிய சாதனங்கள், தயாரிப்புகள் விலை குறைந்துள்ளன” என்றார்.

அதேநேரம் மற்ற முன்னேறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடும் போது, பிரெக்சிட்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் வர்த்தக முதலீடு நன்கு வளர்ந்த நிலையிலேயே இருந்துள்ளது.

2016ஆம் ஆண்டுவரை முதலீட்டு வளர்ச்சி இருந்ததையும் அதன்பிறகு அது மட்டுப்பட்டு விட்டது என்பதையும் பிரெக்சிட் ஆதரவு பொருளியலாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

மேலும், பிரிட்டனின் வர்த்தக தேக்கத்துக்கு பிரெக்சிட் ஒரு காரணமாக இருக்கிறது என்று வர்த்தக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.