துபாயில் இருந்து 10 கிலோ தக்காளி வாங்கி வந்த பெண்- டுவிட்டரில் வைரலான பதிவு!!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சில மாநிலங்களில் 1 கிலோ தக்காளி ரூ.300-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வை கேலி செய்யும் வகையில் சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளி குறித்த பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அதில், எனது சகோதரி விடுமுறைக்காக அவரது பிள்ளைகளை அழைத்து கொண்டு இந்தியா வந்தார்.
அப்போது அவர் துபாயில் இருந்து உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என எனது தாயாரிடம் கேட்டார். அதற்கு எனது தாயார், 10 கிலோ தக்காளி வாங்கி வருமாறு கூறினார். அதன்படி எனது சகோதரி 10 கிலோ தக்காளியை பார்சல் செய்து சூட்கேசில் கொண்டு வந்தார் என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 600-க்கு மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது. இதனை பார்த்த பயனர்கள் தக்காளி கொண்டு வந்த சகோதரியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.