;
Athirady Tamil News

மணிப்பூரில் அதிர்ச்சி சம்பவம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!!

0

மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் எதிர் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், பிரதமரின் மவுனம் மற்றும் செயலற்ற தன்மை மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டு சென்றுள்ளது. மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது. நாங்கள் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல பிரியங்கா காந்தியும் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் ஏன் கண்மூடி தனமாக அமர்ந்திருக்கிறார்கள்? இது போன்ற படங்களும், வன்முறை சம்பவங்களும் அவர்களை தொந்தரவு செய்யவில்லையா? என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வெட்க கேடானது. கண்டனத் துக்குரியது. இதுபோன்ற கொடூரமான செயலை இந்திய சமூகத்தில் பொறுத்து கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார். இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.