’பணவீக்கத்துக்கு இதுதான் காரணம்’!!
அதிகளவில் பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையிலான 21 மாதங்களில் 35,042.8 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதம் ஒன்றுக்கு சராசரியாக 1669 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பணவீக்கமானது 69.8 வீதமாக அதிகரித்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 12 வீதமாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.