அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து 4 பேர் பலி!!
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 4 பேர் பயணம் செய்தனர்.
அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த ஏரியில் விழுந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அலாஸ்கா மாகாண இயற்கை வனத்துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. பலியானவர்களில் ஒரு விமானி, 3 அரசு ஊழியர்கள் ஆவார்கள். விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணி நடந்தது.