ரஷ்யா எடுத்துள்ள அதிரடி முடிவு – சிக்கலில் பிரித்தானிய தூதரக அலுவலர்கள் !!
ரஷ்யாவில் பணியாற்றும் பிரித்தானிய தூதரக அலுவலர்கள், 120 கிலோமீற்றர் தொலைவுக்குள் மட்டுமே சுதந்திரமாக நடமாட முடியுமென ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது பிரித்தானிய தூதரக அலுவலர்கள், 120 கிலோமீற்றர் தொலைவுக்குள் மட்டுமே சுதந்திரமாக நடமாட முடியும். அதைத் தாண்டி அவர்கள் பயணிக்க விரும்பினால், ஐந்து நாட்களுக்கு முன்பே அவர்கள் அது குறித்து முன்னறிவித்தல் கொடுப்பதுடன், தங்கள் பயணம் குறித்த முழு விவரங்களையும் விளக்கமாக தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்யாவுக்கான பிரித்தானிய தூதர் மற்றும் மூன்று மூத்த தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், தற்போது ரஷ்யா இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக, தூதர்கள் பயணிப்பதை அரசாங்கங்கள் தடுப்பதில்லை. ஆனால், இதுபோல் பயணக் கட்டுப்பாடுகள் விதித்தல் அவர்கள் பயணிப்பதை கடினமாக்கலாம்.
இதனால், அவர்கள் விசா பெறுவதற்கு கால தாமதமாகலாம், அவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் ரஷ்ய அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகவும் வாய்ப்புள்ளது.