;
Athirady Tamil News

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மகள் மரணம்!!

0

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் – மனைவி ஊனா ஓ நீல் தம்பதிக்கு பிறந்த 8 குழந்தைகளில் 3வது பெண் குழந்தையாக ஜோசபின் சாப்ளின் என்பவர் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகா நகரில் பிறந்தார். இவர் சாப்ளினின் ‘லைம்லைட்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1972ம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான ‘தி கேன்டர்பரி டேல்ஸ்’ என்ற படம் விருது பெற்றது. பாரீஸ் நகரில் வசித்து வந்த அவர், தனது 74வது வயதில் காலமானார். ஜோசபின் சாப்ளின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.