அமெரிக்காவில் இலங்கையருக்கு கிடைத்த உயரிய பதவி !!
அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது கல்வித் தலைவராக இலங்கை வானியலாளர், விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் கலாநிதி ரே ஜெயவர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராக ரே ஜயவர்தன நியமிக்கப்பட்டதன் மூலம், பல்கலைக்கழகத்தின் கல்விக் கொள்கைகளை அமைப்பது, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் பாடத்திட்டத்தைத் தயாரிப்பது போன்ற பணிகளை அவர் மேற்கொள்வார்.
கல்வித் தலைவராக கலாநிதி ரே ஜயவர்தன எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அவர் 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றி வருகிறார்.
ரே ஜயவர்தன ஒரு இலங்கையர் . அவர் நுகேகொட சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்று அமெரிக்காவிற்கு உயர்கல்விக்காக புலம்பெயர்ந்தார். அவர் ஜால பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டு விஞ்ஞான பட்டத்தையும் 2000 ஆம் ஆண்டு ஹவாட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.