சமூகவலைதளங்களில் பதிவிட வீடியோ எடுத்தபோது மரம் முறிந்து ஆற்றுக்குள் விழுந்த வாலிபர்கள் !!
விழுந்தது. திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காக பலர் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள். அதுபோன்று வீடியோ எடுப்பதற்காக இளைஞர்கள் பலர், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் வீடியோ எடுப்பது அதிகரித்து வருகிறது. அவ்வாறு வீடியோ எடுக்கும் போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இருந்தபோதிலும் இளைஞர்கள் பலர், உயிரை பணயம் வைத்து வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள். அதுபோன்ற வீடியோ எடுத்த வாலிபர்கள், ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. கேரள மாநிலம் மலப்பரம் மாவட்டம் காளிக்கா கெட்டுங்கால் சிரா ஆற்றில் குளிபபதற்காக கருளா பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் சென்றனர்.
அப்போது அவர்கள், அங்கு ஆற்றுக்கு மேலே வளைந்தபடி வளர்ந்திருந்த தென்னை மரத்தின் மீது ஏறி நின்று, அங்கிந்து ஆற்றுக்குள் குதிப்பது போன் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட திட்டமிட்டனர். அதன்படி 4 வாலிபர்கள், மரத்தின் மேல் ஏறி அமர, கரையில் இருந்து சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது வாலிபர்கள் அமர்ந்திருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதனால் மரத்தின் மேல் அமர்ந்திருந்த வாலிபர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். ஆற்றில் முழுவதுமாக தண்ணீர் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மரம் முறிந்து வாலிபர்கள் ஆற்றுக்குள் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.