குளிப்பதை படமெடுத்த சார்ஜன்ட் கைது!!
வீடொன்றுக்குள் நுழைந்து அவ்வீட்டின் குளியறைக்குள் புகுந்து, அங்கு பெண்ணொருவர் ஆடைகளின்றி குளித்துக்கொண்டிருப்பதை தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அமைச்சு பாதுகாப்பு பிரிவில் இணைந்து சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர் என்று அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் எம்.பியின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இந்த பொலிஸ் சார்ஜன்ட், அந்த வீட்டுக்கு அண்மையுள்ள காணிக்குள் களவாக நுழைந்து, அங்குள்ள வீட்டுக்குள் புகுந்து, குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை, தன்னுடைய அலைபேசியின் ஊடாக வீடியோ எடுத்துள்ளார்.
அந்தப் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்த அலைபேசி, பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.