ஜனாதிபதியின் மற்றுமொரு சந்திப்பு!!
இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கடன் மீட்பு நடவடிக்கைகள் நியாயமான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சே நேற்று (24) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது முன்வைத்துள்ளார்.