சீனாவை நெருங்கும் இந்தியா – இன்று வெளியான முக்கிய தகவல் !!
மக்கள் தொகையில் சீனாவை விஞ்சுவதற்கு இன்னும் மூன்று கோடி பேர் தேவை என இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு என்று நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளது.
இது தொடர்பில் உள்துறை அமைச்சு வெளியிட்ட பதிலில்,
தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 இலட்சத்து 29 ஆயிரம் ஆக உள்ளது. அதே நேரத்தில் ஜூலை முதலாம் திகதி கணக்கின்படி சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரம் ஆக உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து இந்தியாவின் மக்கள் தொகை சீனாவின் மக்கள் தொகையை விட சுமார் 3 கோடி குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில ஊடகங்களில் இந்தியாவின் மக்கள் தொகை சீன மக்கள் தொகையை விட அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது