;
Athirady Tamil News

நியூஸிலாந்தில் இலங்கை சிறுவனுக்கு வழங்கப்பட்ட துணிச்சலான விருது !!

0

கொமன்வெல்த் பிரஜை ஒருவருக்கு வழங்கப்படும் மவுன்ட்பேட்டன் பதக்கத்தை இலங்கை சிறுவனான கிவி, கல்யா கமகே பெற்றுள்ளார்.அலையில் அடித்துச் செல்லப்பட்ட தனது சகோதரனை துணிந்து காப்பாற்றியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி, 13 வயதுடைய கல்யா கந்தேகொட கமகே தனது 11 வயது சகோதரன் கித்மியுடன் கிறிஸ்டல்ஸ் கடற்கரையில் நீர் விளிம்பில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய அலை அவரது இளைய சகோதரனை அவரது காலில் இருந்து இழுத்துச் சென்றது, மேலும் இரண்டு பெரிய அலைகள் அவரை தண்ணீருக்குள் இழுத்தன.

தன்னம்பிக்கையான நீச்சல் வீரரான கித்மி, கரைக்கு திரும்ப முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை, அவர் தொடர்ந்து தண்ணீரில் எதிர்நீச்சல் போட்டார் இருப்பினும், 3 மீட்டர் வீச்சுடன் போராடி அவர் கரையிலிருந்து மேலும் இழுக்கப்பட்டதால் சோர்வடைந்தார்.

அப்போதுதான் அவனுடைய மூத்த சகோதரன் அவர்களின் தாயிடம் திரும்பி, ‘சரி அம்மா, நான் வெளியே போகிறேன். நான் திரும்பி வராமல் இருக்கலாம்.’’என கூறி தனது சகோதரனை காப்பாற்ற நீர் நிலையில் குதித்தான். எனினும் கடும் குளிர், பாரிய அலைகளுக்கு நடுவே மிகவும் போராடி தனது சகோதரனை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார் கல்யா கமகே.

அந்த உயிர்காக்கும் திறன் கல்யா 2022 ஆம் ஆண்டுக்கான மவுண்ட்பேட்டன் பதக்கத்தை பெற தகுதி உடையதாக ஆக்கியது. இது கொமன்வெல்த்தின் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதுண்டு. தற்போது 14 வயதான இவர், வீரத்திற்கான விருதை வென்ற மிக இளைய நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.