பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை !!
2030 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19வது அமர்வில், இத்தாலியில் உணவு மற்றும் விவசாயத்திற்கான மரபணு வளங்கள் தொடர்பான ஆணைக்குழுவில் உரையாற்றிய அவர், இந்த சவாலை முறியடிக்க அமைச்சும் இலங்கையின் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களமும் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் துணையுடன், இலங்கையில் 500 இற்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்ட பாரியளவிலான பாலுற்பத்தி பண்ணைகளை அபிவிருத்தி செய்ய முன்மொழியப்பட்டுள்ள இரு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.