சட்லஜ் ஆற்றின் வெள்ளத்தால் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்தியர்!!
பாகிஸ்தான், லாகூரிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாபின் கசூர் மாவட்டத்தில் உள்ள கந்தா சிங் வாலா அருகே சட்லஜ் ஆற்றின் வெள்ளத்தில் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மீட்புக்குழு 1122ன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” 50 வயதுடைய இந்தியர் காது கேளாதவர் மற்றும் சைகை மொழி மூலம் தொடர்பு கொள்கிறார். அவர் ஒரு இந்து என்று கூறினார். வெள்ள நீர் அவரை இங்கு இழுத்துச் சென்றது” என்றார்.
இதைதொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபர் புலனாய்வு அமைப்பிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சட்லஜ் ஆற்றில் கந்தா சிங் வாலா என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கந்தா சிங் வாலாவை ஒட்டிய தாழ்வான பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே, “கடந்த வாரத்தில் செனாப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்கள் மற்றும் பகுதிகளை மூழ்கடித்தது. இதன் காரணமாக 48,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று பஞ்சாப் அரசு கூறியுள்ளது.