;
Athirady Tamil News

பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலையில் இந்த வாகனங்கள் செல்ல தடை!!

0

118 கிமீ நீளமுள்ள பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். ரூ. 8,480 கோடி மதிப்பிலான இந்தத் திட்டமானது பெங்களூரு-நிடகட்டா-மைசூரு வழித்தடத்தில் ஆறு வழிச்சாலையை கொண்டது.

இந்நிலையில், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், டிராக்டர்கள் ஆகியவை ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் பெங்களூரு- மைசூரு விரைவு சாலையில் செல்ல இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை தடை விதித்துள்ளது. பெங்களூரு- மைசூரு விரைவு சாலையில் ஏற்பட்ட தொடர் விபத்துக்களை தொடர்ந்து இம்முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர். தடை செய்யப்பட்ட வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.