ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் – சரத் பவார், அஜித் பவாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு !!
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார். முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றcர். அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் பாந்திராவில் நடந்தது. அதன்பின், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்தார்.
இதேபோல், சரத் பவார் தரப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.