முத்துராஜாவுக்கு வரவேற்பு விழா!!
முடிவடைந்த பின்னர், யானையை தாய்லாந்திற்கு மீண்டும் வரவேற்கும் நிகழ்வு ஒசக் சுரின் (முத்துராஜா) யானையின் 30 நாள் தனிமைப்படுத்தல் ன்றை தேசிய வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு நடாத்தவுள்ளதாக அமைச்சர் வரவுட் சில்பா ஆர்க்கா தெரிவித்துள்ளார்.
30 வயதான முத்துராஜா யானை ஜூலை 2 ஆம் தேதி இலங்கையில் இருந்து சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டதிலிருந்து சிகிச்சை பெற்று வரும் நிலையமாகிய லம்பாங்கில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில் (TECC) இந்த விழா நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரத்த பரிசோதனை செய்து யானை பூரண நலம் பெற்றது உறுதி செய்யப்பட்ட பின் இந்நிகழ்வு நடைபெறும்.
குறித்த நிகழ்வின் பிற்பாடு பொதுமக்கள் சக் சுரினைப் பார்வையிட தாய் யானைகள் பாதுகாப்பு மையம் அனுமதிக்கவுள்ளது. யானை முழுமையாக குணமடையும் வரை மையத்தில் மற்ற யானைகளுடன் சேர்ந்து வாழும் என்று திரு வரவுட் கூறினார்.