நாட்டில் புற்றுநோய் பரவல் அதிகரிப்பு!!
தற்போது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்கு இரண்டாவது பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளதாக அதன் பணிப்பாளரும், வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணியாக புற்றுநோய் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் 15,599 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.
2020 இல் 37,649 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதே நேரத்தில், புற்றுநோயின் அதிகரிப்பையும் நாம் காண்கிறோம். ஆண்களில் முதன்மையான புற்றுநோயாக வாய் புற்றுநோய் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.