அமரகீர்த்தி கொலை வழக்கில் 37 பேருக்கு பிணை !!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் னைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரள கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
அன்று பிற்பகல் காலிமுகத்திடம் போராட்டக் களத்துக்கு அருகில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை நாட்டில் வன்முறையை தோற்றுவித்ததோடு, அலரி மாளிகையில் இருந்து பொலன்னறுவையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நிட்டம்புவ நகர மையத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார்.
இதன்போது, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் சார்ஜன்ட் ஜெயந்த குணவர்தனவும் அப்போது கொல்லப்பட்டார்.