;
Athirady Tamil News

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: கல்லூரி மாணவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற நண்பன்!!

0

டெல்லியை சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி நர்கீஸ்.

இவருக்கு இர்ஃபான் எனும் டெலிவரி வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் அவரிடம் தெரிவித்துள்ளான். இதனை ஏற்க நர்கீஸ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இர்ஃபான் அவரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளான். நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான். இதனை அப்பாவியாக நம்பி வந்த அவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளான். தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே இன்று நர்கீஸின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையிலேயே உறுதியானது. காவல்துறையின் விசாரணை முடிவில் இர்ஃபான் கைது செய்யப்பட்டான். அப்போது அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். “சடலத்தின் அருகே இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். இக்குற்றம் காதல் விவகாரத்தில் நிகழ்ந்துள்ளது”, என்று டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சந்தன் சௌத்ரி கூறினார். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த சம்பவத்தை அறிந்து, பெண்களுக்கு தேசிய தலைநகரில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறியிருப்பதாவது: “டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இன்று 2 சம்பவங்கள் நடந்துள்ளன: தாப்ரியில் ஒரு சிறுமி சுட்டு கொல்லப்பட்டார், அரபிந்தோ கல்லூரி அருகே ஒரு பெண் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கூட்டத்தை கூட்ட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த சம்பவங்களை மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. இவ்வாறு ஸ்வாதி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.