நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வு -மகப்பேறு மருத்துவ நிபுணருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு !!
மகப்பேறு மருத்துவ நிபுணர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்தது நீதிமன்றம்.
அமெரிக்காவின் நியுயோர்க் நகரைச் சேர்ந்தவர்ட் மருத்துவ நிபுணரான ராபர்ட் ஹேடன்(64) என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1980 ஆண்டில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியுயோர்க் பிராஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தார்.
அந்தக் காலகட்டங்களில் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அவர் வன்புணர்வு செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த 2017ஆம் ஆண்டு பல பெண்கள், ராபர்ட் ஹேடனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினர்.
இப்புகாரை அடுத்து, அவர் மீது காவல்துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 245 பெண்கள் அவர் மீது புகார் கூறினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அனைத்து விசாரணைகளும் முடிந்து, 9 பெண்களிடம் சாட்சியம் பெறப்பட்டது.
இதையடுத்து, மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ரிச்சர்ட் 20 ஆண்டு காலத்தில் நூற்றுக்கணக்ககான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.