;
Athirady Tamil News

35 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்களை கைது செய்த நாடு !!

0

துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக துருக்கிக்கு அயல் நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. எனவே இதனை தடுப்பது சிக்கலான ஒன்றாக உள்ளது.

அந்தவகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் புலம் பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 16 ஆயிரத்து 18 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது சட்ட விரோதமாக குடியேற்றத்தை தடுக்க அங்குள்ள கடற்கரையில் சுற்றுலா படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்காணிப்பதற்காக புலம்பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலகத்தின் 9 நடமாடும் மையங்கள் இஸ்தான்புல் நகரில் நிறுவப்பட்டுள்ளது.

அங்கு புலம்பெயர்ந்தோரின் கை ரேகை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதனை 39 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.