திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி டெல்லி மாணவி கொலை!!
டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர் பயிற்சியில் நர்கிஸ் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், நர்கிஸ்க்கும் அவரது உறவினரான இர்பானுக்கும் திருமணம் செய்து வைக்க பேசப்பட்டுள்ளது. ஆனால், இர்பானுக்கு சரியான வேலை இல்லாததால் நர்கிசுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை. இதனால், நர்கிஸ் இர்பானிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இர்பான், பயிற்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நர்கீஸை வழிமறித்த இர்பான் தன்னிடம் பேச வேண்டும் என்றும் பூங்காவிற்குள் வரும்படியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் நர்கீஸ் வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரடைந்த இர்பான் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து நர்கீசை சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இர்பான் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, நர்கிஸ் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் கொலை செய்ததாக இர்பான் போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், தேசிய தலைநகரான டெல்லி மிகவும் பாகாப்பற்று இருப்பதாக தெரிவித்தார். டெல்லி காவல்துறையின் பொறுப்புணர்வை சரிசெய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை இறப்புகள் நிகழ வேண்டும் என்று நான் மையத்திடம் கேட்க விரும்புகிறேன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.