;
Athirady Tamil News

நைஜரில் ‘அமெரிக்க ஆதரவு’ அதிபரை சிறைப்பிடித்து ஆட்சியைப் கைப்பற்றி ராணுவம்!!

0

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அந்நாட்டு ராணுவத்தினர் அதிபரை சிறைப்பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக தொலைக்காட்சியில் அறிவித்தனர். இது ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பை கலைத்துவிட்டதாகவும், அனைத்து நிறுவனங்களையும் இடைநீக்கம் செய்து தேசத்தின் எல்லைகளை மூடிவிட்டதாகவும் ராணுவ வீரர்கள் அறிவித்துள்ளனர்.

புதன்கிழமை (ஜுலை 26) அன்று நைஜர் அதிபர் மொஹமத் பாஸோம் அவரது பாதுகாவலர்களால் சிறைவைக்கப்பட்ட அடுத்த நாளே அந்நாட்டின் ராணுவத்தினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், நைஜர் அதிபருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். நைஜர் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பேசிய அவர், அமெரிக்கா அவருக்கு தடையற்ற ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நைஜர் ஜனாதிபதி பாஸோம் முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அதிபருடன் பேசியதாகவும், நைஜர் நாட்டிற்கு ஐநாவின் முழு ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

மேற்கு ஆபிரிக்காவில் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நைஜர் அதிபர் பாஸ் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களால் உள்நாட்டுப் போரைச் சந்தித்துள்ளன.

அதிபர் பாஸோம் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் நலமாக இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் கேத்ரீன் கொலோன்னா வெள்ளியன்று தெரிவித்தார்.

மறு அறிவிப்பு வரும் வரை உள்ளூர் நேரப்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என கர்னல் மேஜ் அப்த்ரமனே அறிவித்தார்.

புதனன்று தொலைக்காட்சி அறிவிப்பில், கர்னல் மேஜ் அமடூ கூறுகையில்: “நாங்கள் ராணுவம், பாதுகாப்புப் படையினர்… இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம்.

“பாதுகாப்பு நிலைமையின் தொடர்ச்சியான வீழ்ச்சி, மோசமான பொருளாதார மற்றும் சமூக நிர்வாகத்தின் விளைவு இது,” என்றார்.

மேலும், நாட்டின் அனைத்து அமைப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சகத்தின் தலைமை அதிகாரிகள் அன்றாட வேலைகளை கவனிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

“அனைத்து நட்பு நாடுகளும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று கூறிய அவர்,”நிலைமை சீராகும் வரை நில மற்றும் வான் எல்லைகள் மூடப்படும்.” என்றும் அறிவித்தார்.

மறு அறிவிப்பு வரும் வரை உள்ளூர் நேரப்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தாயகத்தின் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சிலுக்கு (சிஎன்எஸ்பி) பாதுகாப்பு படையினர் பணியாற்றுவதாக கூறினார், கர்னல் மேஜ் அப்த்ரமனே.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு, குறுகிய காலத்திற்கு இருந்தால் கூட, நைஜர் நிரந்தர பாதுகாப்பு தளமாக இருக்கும் என நம்ம முடியாது என்பதைக் காட்டுகிறது

சஹேல் என்று அழைக்கப்படும் மேற்கு ஆபிரிக்காவின் பகுதியில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சு மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளுக்கு இந்த ஆட்சிக் கவிழ்ப்பு இன்னும் மோசமான செய்தியாகும்.

அண்டை நாடான மாலி, பிரான்ஸின் பதிலாக ரஷ்யாவின் வாக்னர் குழுமத்துடன் கூட்டுசேர்வதற்கு முடிவெடுத்தபோது, பிரான்ஸ் அதன் செயல்பாட்டு மையத்தை நைஜருக்கு மாற்றியது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு, குறுகிய காலத்திற்கு இருந்தால் கூட, நைஜர் நிரந்தர பாதுகாப்பு தளமாக இருக்கும் என நம்ப முடியாது என்பதைக் காட்டுகிறது. இப்பகுதியில் மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது.

புர்கினா பாசோ, மத்திய ஆபிரிக்க குடியரசு (CAR) மற்றும் மாலி ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அனைத்துமே மேற்கத்திய படைகளை விட ரஷ்யாவின் மிருகத்தனமான வாக்னர் கூலிப்படைகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

பாதுகாப்பு படையினர் தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்ட அறிவிப்பிற்கு பிறகு, அதிபர் பாஸோமையை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது.

சிறந்த நிர்வாகத்தை வளர்க்கும் மேற்கத்திய இலக்குகளைப் பின்பற்றுவதை விட, ஆப்பிரிக்காவில் வாக்னர் படையினர், தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், கிரெம்ளினின் செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்ளவும் முடிவு செய்திருந்தனர்.

இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய கிளர்ச்சிக் குழுக்களான, ஐ.எஸ். மற்றும் அல்-காய்தாவுக்கு இது ஒரு நல்ல செய்தி. அவர்கள், அரசின் உறுதியற்ற தன்மை, மோசமான நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியில்தான் வளர்கிறார்கள். எனவே, நைஜரில் நடந்துள்ள மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

பாதுகாப்பு படையினர் தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்ட அறிவிப்பிற்கு பிறகு, பிளிங்கன், ஜனாதிபதி பாஸூமையை விடுவிக்கக்கோரியிருந்தார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றி, அரசியலமைப்பை சீர்குலைக்கும் முயற்சி” என்று கூறினார்.

ஆப்ரிக்கப் பொருளாதாரக் கூட்டமைப்பு என்ன சொல்கிறது ?

அண்டை நாடான மாலியில், அதிக ஆயுதம் ஏந்திய ரஷ்ய வாக்னர் கூலிப்படையினர் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடி ராணுவ ஆட்சிக்கு உதவுகிறார்கள்.

ஆப்பிரிக்காவில் ரஷ்ய செல்வாக்கை விரிவுபடுத்துவதில் ஆர்வமுள்ள அதிபர் விளாடிமிர் புதின், வியாழன் அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஆப்பிரிக்க தலைவர்களுக்கு விருந்தளித்தார்.

நைஜரில் “பலத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக” மேற்கு ஆப்ரிக்கப் பொருளாதாரக் கூட்டமைப்பான் ஈகோவாஸ் கூறியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க மாநிலங்களின் பொருளாதார குழுமத்தின் சார்பில் தலைவர் பட்ரிஸ் டாலன் பேச்சுவார்த்தைக்காக தலைநகர் நியாமே வந்துள்ளார்.

நைஜரில் அரசியலமைப்பு ஒழுங்கை மீட்டெடுக்க தேவையானா “எல்லா வழிகளும்” பயன்படுத்தப்படும் என்று டாலன் கூறினார்.

“எல்லாவற்றையும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் செய்யப்படுவதே சிறந்ததாக இருக்கும்”.

முன்னதாக புதன்கிழமை அன்று, நியாமி மக்கள் அதிபருக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கினர்.

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட வீரர்கள் எதிர்ப்புகளை உடைக்க துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், நகரம் பெரும்பாலும் அமைதியாக இருந்தது.

நைஜர் இரண்டு இஸ்லாமிய கிளர்ச்சிகளுடன் போராடி வருகிறது – ஒன்று தென்மேற்கில், 2015 இல் மாலியிலிருந்து பரவியது, மற்றொன்று தென்கிழக்கில், வடகிழக்கு நைஜீரியாவை தளமாகக் கொண்ட ஜிஹாதிகளை உள்ளடக்கியது.

2021 இல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பாஸோம், பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் நட்பாக இருந்தார்.

1960 இல் பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து நைஜர் நாடு சுமார் நான்கு முறை ஆட்சிக் கவிழ்ப்பை சந்தித்திருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.