உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படும் கத்தார் – வெளியான புதிய அறிவிப்பு !!
தற்போது தீவிரமடைந்து வரும் உக்ரைன் ரஷ்யப்போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் உதவி வழங்குவதாக கத்தார் அறிவித்துள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணிவெடி அகற்றலுக்காக உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கத்தார் வழங்கவுள்ளது.
கத்தார் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கத்தாரின் வெளியுறவு அமைச்சரான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி உக்ரைனுக்கு விஜயம் செய்வதாக கத்தார் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைனிய அதிபரின் தலைமை அதிகாரி, கருங்கடலில் பொதுமக்கள் கப்பல்களை ரஷ்யா அச்சுறுத்துவதாகவும் பயங்கரவாதிகளின் இத்தகைய செயல்களை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.