;
Athirady Tamil News

ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன்: நடுவழியில் தடுத்து அழித்த ரஷியா!!

0

520 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் அதிக உயிர்கள் பலியாகியது. தவிர, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், உக்ரைனின் தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ஏவிய 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது. “உக்ரேனிய ஏவுகணைகளை ரஷிய வான் பாதுகாப்பு கருவிகள் கண்டு, வானில் இடைமறித்து தாக்கியது. இதில் கீழே விழுந்த உக்ரைன் நாட்டு முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்தது. சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் டேகன்ராக் நகரின் குடியிருப்புகளை குறிவைத்து முதல் S-200 ஏவுகணை செலுத்தப்பட்டது. இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டது.

இதனை வீழ்த்தியபோது அதன் பாகங்கள், மக்கள் இல்லாத பகுதியில் விழுந்தது”, என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளது. உக்ரைனின் எல்லை பகுதிகள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து டிரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை கண்டு வருகின்றன. ஆனால் நேற்றைய சம்பவம் நடைபெறும் வரை ஏவுகணைகளால் குறிவைக்கப்படவில்லை. “மத்திய டேகன்ராக் பகுதியில் உள்ள செகோவ் கார்டன் உணவகத்திற்கு அருகே இத்தாக்குதலால் 15 பேர் லேசாக காயமடைந்தனர். மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். உயிரிழப்புகள் இல்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த ஓட்டலில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் உள்ள கலை அருங்காட்சியகத்திற்கு மேல் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் அருங்காட்சியகச் சுவர், அதன் கூரை மற்றும் வெளிப்புறக் கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதன் தாக்கத்தால் அருகில் உள்ள 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் பிரேம்கள் சேதமடைந்தன” என இச்சம்பவம் குறித்து ரோஸ்டோவ் பிராந்திய ஆளுனர் வாசிலி கோலுபேவ் தெரிவித்தார். உக்ரைன் நகரின் எல்லையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அசோவ் கடற்கரை அருகே டேகன்ராக் நகரம் அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.