பிறக்கும் போதே அழகை தேடும் குழந்தைகள் !!
தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தைகளின் மூளையில் அழகுணர்ச்சி பதிவாகுவதாக இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் மற்றும் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைகளிடமே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வில், குழந்தையின் முன்னால் அழகு குறைந்த மற்றும் அழகான முகங்கள் காட்டப்பட்டன.
அழகு குறைந்த முகத்தை விட அழகான முகத்தையே குழந்தைகள் 80 சதவீதம் அதிகமான நேரம் பார்த்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கவர்ந்திழுக்கும் தன்மை ஒருவரது கண்கள் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல, ஒரு குழந்தை பிறந்தது முதல், அல்லது பிறப்புக்கு முன்னரே கூட அதன் மூளையில் பதிவான விடயம் என்கிறது எக்ஸெடெர் பல்கலைக்கழக ஆய்வுக்குழு.
அழகுணர்ச்சி மட்டுமின்றி நல்ல இசையைத் தேர்வு செய்யும் திறனும் குழந்தைகளிடம் இருப்பதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது.