நீங்கள் பயண விரும்பி என்றால் தவறியும் இந்நாடுகளுக்கு பயணித்து விடாதீர்கள்..!
பயணம் செல்லுவது என்றாலே அதில் எல்லோருக்கும் தனி விருப்பம் உள்ளது.
நாம் எந்தளவிற்கு பயணம் செய்ய விரும்புகிறோமோ அந்தளவிற்கு நாம் பயணிக்கும் இடமும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஒரு சில பகுதிகள் குற்றங்கள், உள்நாட்டு அமைதியின்மை, பயங்கரவாதம் போன்ற ஆபத்தான காரணிகளால் பயணத்திற்கு பாதுகாப்பில்லாத நாடுகளாக மாறுகிறது.
அவ்வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை 2023 இல் பயணிக்க பாதுகாப்பற்ற சில நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குற்றச்செயல்கள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் கடத்தல் ஆகியவற்றின் அதிக ஆபத்து காரணமாக வெனிசுலாவிற்கு பயணம் செய்வதை எதிர்த்து அமெரிக்க வெளியுறவுத்துறை கடுமையாக பயணத் தடையை அறிவுறுத்துகிறது.
உள்ளூர் சட்டங்களின் தன்னிச்சையான அமலாக்கம் மற்றும் வரையறுக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு மோசமாக இருக்கும்.
பயங்கரவாதம், கடத்தல் மற்றும் ஆயுத மோதல்கள் காரணமாக ஈராக் செல்வது ஆபத்தானது என்று அறியப்படுகிறது.
சில ஆண்டுகளாகவே கலகங்களுக்கு பெயர்பெற்ற நாடுகளில் இடம் பிடித்துள்ள ஈராக் சுற்றுலா செல்ல நிச்சயம் ஏற்றதல்ல.
போராளிக் குழுக்கள் தொடர்ந்து ஈராக் பாதுகாப்புப் படைகளையும் பொதுமக்களையும் குறிவைத்து, தாக்குதல் நடத்துவதால் அந்த நாட்டைத் தவிர்ப்பது நல்லது.
சோமாலிய என்ற பெயரைக் கேட்டதும் சோமாலிய கொள்ளைக்காரன் என்ற வார்த்தை மக்களுக்கு நினைவுக்கு வரலாம்.
குற்றம், பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக சோமாலியா ஆபத்தான இடமாக உள்ளது.
கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட வன்முறை குற்றங்கள் நாடு முழுவதும் பொதுவானவை.
அவற்றில் சிக்குவதை தவிர்ப்பது முக்கியம்.
ஹயாத்தியின் வறுமையான சூழ்நிலைகள் கடத்தல், குற்றம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவை நாட்டை மோசமான நிலைக்கு தள்ளி வைத்துள்ளது.
தொழில்புரியும் பல வாய்ப்புகள் இந்த இடத்தில் இருந்தாலும் போட்டி காரணமாக வன்முறையும் அளவு கடந்து காணப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, இராணுவத் தாக்குதல்கள், குற்றம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் காரணமாக உக்ரைனுக்கு வருகை தருவதற்கு எதிராக பல நாடுகளின் வெளியுறவுத்துறையும் எச்சரிக்கை விடுக்கிறது.