;
Athirady Tamil News

துபாயில் பிரம்மாண்ட பரிசை தட்டிச்சென்ற இந்தியர்- 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 லட்சம் பரிசு!!

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகமது அடில் கான், தான் வாங்கிய முதல் லாட்டரி சீட்டின் மூலம் ஃபாஸ்ட்5 பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் பெறுகிறார். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான முகமது அடில் கான், துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

அதை வாங்கும்போது அவர் தன்னை பெரும் பரிசின் வெற்றியாளராக மாற்றும் என்று கற்பனைகூட செய்திருக்க மாட்டார். 2018 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து துபாய் சென்ற முகமது அடில், ஒரு நாள் சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்யும்போது அதில் வந்த விளம்பரத்தை கண்டு லாட்டரி சீட்டை வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், முகமது அடில் பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார். இதுகுறித்து முகமது அடில் கூறுகையில், ” எனது முதல் லாட்டரி டிக்கெட் என்னை முதல் ஃபாஸ்ட்5 பரிசை வென்றவராக மாற்றும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு எனது வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏஇடி 25,000 (ரூ.5.5 லட்சம்) பெறுவது நம்பமுடியாதது. இந்த வெற்றியால், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும்.

தனது குடும்பத்திற்காக வீடு வாங்க வேண்டும். இதுபோன்ற தனித்துவமான பரிசு வழங்குவதை வேறு எந்த லாட்டரி நிறுவனத்திடம் இருந்தும் நான் பார்த்ததில்லை. இந்த வெற்றி எனது நிதி சுமைகளை நீக்கி, நிலையான இரண்டாம் நிலை வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க எனக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.