மொகரம் ஊர்வலத்தின்போது ஏந்திய தேசியக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தை- போலீஸ் விசாரணை!!
ஜார்கண்ட் மாநிலம் மேதினிநகர் மாவட்டத்தில் உள்ள பலமுவில் செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, மக்கள் ஏந்தப்பட்டு வந்த மூவர்ணக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தைகளால் மாற்றப்பட்டிருந்தது. இதன் வீடியோ சமூக வலைத்த வைரலானது. மேதினிநகர் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அதற்கு கீழே ஒரு வாள் சின்னம் இருந்தது. இந்த காட்சியை வீடியோ எடுத்த மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் விசாரணைக்காக போலீஸ் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ரிஷப் கார்க் கூறுகையில், “தேசியக் கொடியை அவமரியாதை செய்வது சட்டப்படி குற்றமாகும். சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.