3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!
தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் 2021ல் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர். இந்த காலகட்டத்தில் 18 வயதுக்கும் கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியர் காணாமல் போயுள்ளனர்.
இவற்றில் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 ஆயிரம் பெண்கள் மாயமாகி உள்ளனர். யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.