;
Athirady Tamil News

ஆந்திரா, தெலுங்கானாவில் கழுதை பால் லிட்டர் ரூ.8000 ஆக உயர்வு!!

0

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை பால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. பிறந்த குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழுதை பாலில் மருத்துவக் குணம் அதிகம் என்று அவர்கள் கருதுகின்றனர். கழுதைபால் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையானது.

தற்போது கழுதை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ.8000 வரை விற்பனை செய்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் போயபாலம் சந்திப்பு பகுதியில் 10 கழுதைகளுடன் நான்கு குடும்பங்கள் கொண்ட குழு கழுதை பால் விற்பனை செய்து கொண்டிருந்தனர் . “நாங்கள் ஒரு கப் (25 மில்லி) புதிய கழுதைப்பாலை ரூ.200-க்கு விற்கிறோம். ஒரு லிட்டர் ரூ.8,000-க்கு மொத்தமாக விற்கிறோம். ரூ.1,000 தள்ளுபடி தரலாம். ஒரு கழுதை ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்க முடியும்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்கிறோம். நாங்கள் வழக்கமாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் வணிகத்திற்காக விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு வருவோம்,” என்றனர். விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கழுதைப்பாலின் மருத்துவ குணம் பற்றி கேள்விப்பட்டு 75 மில்லி கழுதைப்பாலை வாங்கியதாக கூறினார். “இங்கே கழுதையிலிருந்து புதிதாகப் பால் கறந்த பச்சைப் பாலை அந்த இடத்திலேயே குடித்து திருப்தியடைந்தேன். விற்பனையாளரிடம் ரூ.500 டிஜிட்டல் பேமெண்ட் செலுத்தினேன்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.