காற்பந்தாட்டப்போட்டியில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன்!! (PHOTOS)
யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ( JSSA) இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ( UK ) அனுசரணையில் மாகாணரீதியில் நடாத்திய 20 வயதுப் பிரிவினருக்கான காற்பந்தாட்டப்போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி அணியை 02:01என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது.
இப் போட்டித் தொடரின் காலிறுதிக்கு முந்திய போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தை 05 : 01 என்ற கோல் கணக்கிலும், காலிறுதியாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை 07 : 00 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதி ஆட்டத்தில் தேவரையாளி இந்துக் கல்லூரி அணியை 03 :00 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது .
இக் காற்பந்தாட்ட தொடரின் சிறந்த காற்பந்தாட்ட ஆட்ட வீராக சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியின் இணைத் தலைவரான A.J. ஜெறோம் தெரிவு செய்யப்பட்டார்.
இக் காற்பந்தாட்ட போட்டிகளுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்ளையும் வெற்றிக்கிண்ணத்தையும் வழங்கினார்.