;
Athirady Tamil News

அன்பு மனைவிக்கு ரூ.3 கோடி கார் பரிசு: அசத்திய மலேசிய தொழிலதிபர்!!

0

மலேசியாவில் தனது அன்பு மனைவிக்கு ஒரு தொழிலதிபர் பொது இடத்தில் வழங்கியிருக்கும் பரிசு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. அந்த வீடியோவில் காணப்படுவது:- அந்த தொழிலதிபர் மலேசியா நாட்டின் பெடாலிங் ஜெயா பகுதியில் 128 ஸன்வே சாலையில், ஸன்வே பல்கலைகழகம் அருகில் காஃபி ஷாப் நடத்தி வருகிறார். அவர் தனது மனைவியை ஒரு சிகப்பு நிற துணியால் மூடப்பட்ட ஒரு காரை நோக்கி அழைத்து செல்கிறார். அந்த கார் முழுவதும் சிகப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காரின் பிராண்ட் அந்த துணியில் தெரிகிறது.

இருவரும் அந்த காரை நெருங்கும்போது அந்த தொழிலதிபர், காரிலிருந்து அந்த துணியை மெதுவாக விலக்குகிறார். அதில் ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் தெரிகிறது. அதன்விலை சுமார் ரூ. 3.68 கோடிகளாகும் (Singapore Dollar 351,800). இக்காட்சிகளை பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் படம் பிடித்தனர். இந்த காட்சிகளுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்துக்கள் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

“எனக்காக இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி. உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்” என அவர் மென்மையாக மனைவியிடம் தெரிவித்ததாக ஒரு சமூக வலைதள பயனாளி தெரிவித்தார். சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரும் தொழிலதிபரான அவர்கள் இருவரின் ஒற்றுமையை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி கருத்து தெரிவிக்கின்ற அதே வேளையில், அவரது பகட்டான செயலை விமர்சித்தும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கடை இருக்கும் முழு தெருவும் போக்குவரத்து தடையால் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.