;
Athirady Tamil News

மணப்பெண் என அறிமுகமாகி என்ஜினீயருக்கு ஆபாச வீடியோ: ஒரு கோடி ரூபாய் கறந்த கில்லாடி பெண்!!

0

கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், பிரிட்டனில் வேலை செய்து வந்தார்.

தொழில்முறை பயிற்சிகளுக்காக பெங்களூருவிற்கு வந்திருந்த அவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு திருமண வரன் தேடும் வலைதளத்தில் விவரங்களை பதிவு செய்து பொருத்தமான பெண்ணை தேடிவந்தார். திருமண வலைதளம் மூலம் அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். பொறியாளரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த அந்த பெண் தான் தந்தையில்லாமல் தாயுடன் மட்டும் வாழ்வதாக கூறியிருந்தார். தாயின் அவசர மருத்துவ தேவைக்காக ஜூலை 2-ம்தேதி ரூ.1500 வேண்டும் என பொறியாளரிடம் கேட்டு பெற்று கொண்டார். மீண்டும் ஜூலை 4-ம் தேதி பொறியாளருடன் வீடியோ காலில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த பொறியாளரின் ஆசையை தூண்டும் விதமாக ஆடையில்லாமல் தோன்றி, அவருடன் ஆபாசமாக உரையாடினார். ஆனால் அந்த உரையாடல்களை பொறியாளருக்கு தெரியாமல் தனது ஸ்மார்ட்போனில் பதிவு செய்து கொண்டார்.

பிறகு, இந்த பதிவை பொறியாளருக்கு அனுப்பி, அவரின் பெற்றோருக்கு அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு பெரும் தொகை வேண்டும் என கேட்டு அவரை பிளாக்மெயில் செய்தார். இதனையடுத்து அந்த பொறியாளர் ரூ.1 கோடிக்கு மேல் அந்த பெண்ணிற்கு அனுப்பினார். அவள் தொடர்ந்து மிரட்டவே, ஒரு கட்டத்தில் அந்த பொறியாளர் காவல்துறையிடம் புகாரளித்தார். உடனே வழக்குப்பதிவு செய்த காவல்துறை அப்பெண்ணை தேடிவருகிறது. மொத்த தொகையில் சுமார் ரூ.30 லட்சம் வரை அப்பெண் ஏற்கனவே செலவழித்து விட்டார். மீதம் உள்ள சுமார் ரூ.84 லட்சம் மீட்கும் முயற்சியில் அப்பெண்ணின் வங்கி கணக்கை முடக்கி விட்டோம்.

ஒருவரை நேரில் சந்தித்து முழு விவரங்களும் அறியாமல் அலைபேசியிலேயே பேசி, இதுபோன்ற தொடர்புகளை வளர்த்து கொள்வதோ, பண பரிவர்த்தனைக்காக நம்புவதோ தவிர்க்கப்பட வேண்டும். அதேபோன்று, மறுமுனையில் பேசுபவரின் நடவடிக்கைகள் சரியில்லையென்றாலும் உடனே தொடர்பை துண்டித்து கொள்ள வேண்டும் என இச்சம்பவம் குறித்து பேசும்போது வைட்ஃபீல்ட் பகுதி காவல்துறை துணை ஆணையர் கிரீஷ் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.