வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது!!
அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18-ந் தேதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டின்போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது.
எனினும் சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் வடகொரியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க முத்தரப்பு நாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.