;
Athirady Tamil News

மிஹிந்தலை மகாநாயக்க தேரர் சஜித்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்!!

0

நாட்டின் 220 இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றாலும் கடந்த காலங்களில் விஷத்தன்மை வாய்ந்த மருந்துப் பொருட்கள் பாவனையால் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும், காலங்காலமாக மருத்துவமனைகளுக்கு முன்பாக மலர்சாலைகள் உள்ளன என்றாலும், அதன் நோக்கம் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் இறந்துபோக வேண்டும் என்ற எதிர்பார்பிலல் என்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.

தற்போது வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதுடன் அதிகமான புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும், இதற்கு காரணமான ஒருவரைக் கூட இப்போது கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளதாகவும், மக்களின் வரிப்பணத்தால் நடத்தப்படும் சில அமைச்சர்கள் மருந்து மாத்திரைகளில் கூட இலஞ்சம் வாங்குகிறார்கள் என்றும், சிலர் மதுபான சாலைகளைக் கூட வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மிஹிந்தலை நகரைச் சுற்றி மதுபானசாலைகள் இல்லை என்றாலும், 8,000 மாணவர்கள் கல்வி கற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு முன்னால் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பியர் பார் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு மதுபான சாலை, ஒரு இறைச்சிக்கடை கூட இல்லாத நகரமாக இருந்த மிஹிந்தலை நகரில் தற்போதைய அரசாங்கம் அந்த சாதனையை முறியடித்துள்ளதாகவும், இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்துமாறும் மிஹிந்தலை ரஜமாஹா விகாரையின் மகாநாயக்க தேரர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் இருந்தாலும் அது குறித்து பேசுவதற்கு ஜனநாயக ரீதியிலான சுதந்திரமோ பேச்சு சுதந்திரமோ இல்லை என்றும், பலவிதமான விதிகள் மற்றும் சட்ட ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்பட்டு மக்களை சிறையில் அடைத்துள்ளதுடன், இவ்வாறான பிரச்சினைகள் இருந்தும் அஸ்வெசும மூலம் மக்களை ஏமாற்றி வருவதாக மகாநாயக்க தேரர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் எல்லா இடங்களிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த கால அமைச்சர்களுடன் ஒப்பிடும் போது இன்றைய நபர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும், சிலர் ஓய்வுபெறும் வயதில் இருந்தாலும் பதவிக்கு பேராசையில் உள்ளனர் என்றும், இந்நிலை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த ஆலோசனைக் குழுவின் ஊடாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள மிஹிந்தலை பொசோன் பெரஹெரா, சதிபிரித மற்றும் அலோக பூஜை ஆகியவற்றிற்கு பங்களிக்கத் தயார் என்றும்,கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த போது மிஹிந்தலை புனித தலத்தில் 3,200 இலட்சம் ரூபா செலவில் பல்வேறு பணிகளை ஆற்றியதாகவும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) மிஹிந்தலை விகாரைக்கு விஜயம் செய்ததோடு, மிஹிந்தலை புனித தலத்தின் பல குறைபாடுகள் நிலவுவது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கவனம் செலுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.