;
Athirady Tamil News

போலீஸ் நிலையத்தில் காதலன் தான் வேண்டுமென கதறி அழுத பொள்ளாச்சி இளம்பெண்- பெற்றோருடன் பாச போராட்டம்!!

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர். கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார். இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர். வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.