;
Athirady Tamil News

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர்..! பழி வாங்க தயாராகும் ரஷ்யா !!

0

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் துறைமுகத்தின் அருகாமையில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கு ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

டான்யூப் நதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகமான Izmail பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய ட்ரோன்கள் புறப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை முன்னர் எச்சரித்திருந்தது.

உக்ரைன் தானிய ஒப்பந்தம் ரத்தான பின்னர், தொடர்ந்து உக்ரைன் துறைமுகங்களையே, ரஷ்யா குறிவைத்து தாக்கி வருகிறது. இதில் தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நடந்த பகுதியில் அவசர சேவைகள் பிரிவு தாக்குதல் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை ராணுவம் வெளியிடும் என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறிய உடனேயே உலகச் சந்தைகளில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்தது.

உக்ரைன் தலைநகர் மீதும் இரவோடு இரவாக ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மாஸ்கோ நகரில் உக்ரைன் தரப்பு ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்க, அதற்கு பழி தீர்க்கும் வகையில் ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்துவதாக கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.