மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி!! (PHOTOS)
மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை பேரணி இடம்பெற்றது.
யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு , பேரணி இடம்பெற்றது.
இந்த பேரணியை மாண்புமிகு மலையக மக்கள் மற்றும் யாழ். சிவில் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் தலைமன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை மலையகம் 200ஐ முன்னிட்டு இந்நடைப்பயண நிகழ்வின் ஏழாம் நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமை கருதப்படுகிறது.