;
Athirady Tamil News

யாழில் “-ஈ-குருவி நடை 2023..!!

0

உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர்க்கை ஊடாக மதிப்பு கூட்டும் வகையிலானவிழிப்புணர்வினை சமூக மட்டத்தில் உருவாக்கும் வகையில் ஈ-குருவி நடை 2023 ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயணமானது எதிர்வரும் ஞாயிறு (06.08.2023 ) அன்று காலை 6.30 மணிமுதல் 9.30 மணிவரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொதுநூலக முன்றலில் ஆரம்பிக்கும் குறித்தநடைபயணமானது வைத்தியசாலை வீதியூடாக சத்திர சந்தியினை அடைந்து, அங்கிருந்துகோட்டை சுற்றுவட்ட வீதியூடாக மீண்டும் பொது நூலகத்தினை வந்தடையவுள்ளது.

இந்த துடிப்பான சமூக முன்முயற்சியானது உடல் உள ஆரோக்கியத்தை மேம்மடுத்தஒவ்வொருநாளும் 10,000 காலடிகள் நடப்பதை விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உள்நாட்டில்உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் மதிப்பு கூட்டுவதற்கான ஆதரவை வலுப்படுத்துவதையும்நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஈ-குருவி நடையானது கடந்த 2020ஆம் ஆண்டுமுதல் கனடா மற்றும் இலங்கையில் சமூகம் சார்ந்தவிழிப்புணர்வினை மேற்கொள்ளும் நடையின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

இந்த நடைபயணத்தில் இணைவதன் மூலம் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகமாகவும், அதேநேரம் உள்ளூர் பொருளாதாராத்தின் மதிப்புக்கூட்டலினை ஆதரிப்பதனூடாக எங்கள்பொருண்மிய மேம்பாட்டினை வலுப்படுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குறித்த நடைப்பயணத்தில் இணைவதற்கான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள0761027092 தொலைபேசி இலக்கத்தோடு இணைந்துகொள்ளுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.